tamilnadu

img

பாதாள சாக்கடை அடைப்பு பொதுமக்கள் அவதி

தருமபுரி, டிச.24- தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடையில் அடைப்பு  ஏற்பட்டு, கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தருமபுரி நகராட்சி 10ஆவது வார்டில் 300க்கு மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள  ஹரிசந்திரன் தெருவில் பாதாள சாக்கடை அமைக்கப் பட்டு 7 வருடங்கள் ஆகியும், இதுவரை முறையாக செயல் படுத்தப்படவில்லை. மேலும் பாதாள சாக்கடை குழாய்  சிறியதாக அமைத்ததால், வீடுகளில் இருந்து வெளியேறும்  தண்ணீர் பாதாள சாக்கடையில் வெளியேற முடியாமல்  அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கி நிற் கிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.  இதையடுத்து, பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் மூலம் அடைப்புகளை நீக்க, நகராட்சி ஊழியர்கள் முயற்சி செய்தும், அடைப்புகளை சரி செய்ய முடியவில்லை. இதனால், ஹரிச்சந்திரன் தெருவில், கழிவு நீரால் புழுக்கள் மிதப்பதுடன், வீடுகளுக்குள்ளும் புழுக்கள்  வந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும்  தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ஹரிச் சந்திரன் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீர் சாலையில் தேங்குவது குறித்து ஆணையரிடம் பலமுறை புகார் செய்தும், நிரந்தர தீர்வு  ஏற்படாமல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை  முறையாக செயல்படுத்த வேண்டும். கழிவுநீர் தெருவில்  தேங்குவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.