தருமபுரி, செப்.12- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தின் அமைப்பு தின விழாவை யொட்டி கொடியேற்று விழாக்கள் நடை பெற்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 33 ஆவது அமைப்பு தின விழா வியாழனன்று கொண்டாடப் பட்டது. இதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கொடியேற்று விழா எழுச்சியுடன் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ருத்ரையன் சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலசெயற்குழு உறுப்பினர் என்.இராமஜெயம், முன்னாள் மாவட்டச் செயலாளர் ச.இளங்குமரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி, சிவப்பிரகாசம், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். அரூரில் வட்டத் தலைவர் சுதாகர் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறு முகம் கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் கோபிநாத் உரையாற்றினார். பாலக்கோட்டில் வட்டத் தலைவர் குண சேகரன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சர்வோத்தமன் கொடியேற்றி வைத்தார். நல்லம்பள்ளியில் வட்டத் தலைவர் ராஜேஸ்வரி கொடியேற்றினார். பென்னா கரத்தில் வட்டத் தலைவர் திம்மராயன், மொரப்பூரில் வட்டத் தலைவர் ஜோதி கணேசன், பாப்பிரெட்பட்டியில் வட்டத் தலைவர் நீலமேகம், காரிமங்கலத்தில் வட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.