தருமபுரி, ஜூன் 5 - மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ்பாஸ் புதுப்பித்துதர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவ லகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின், மாநில துணைத்தலைவர் பி.சரவ ணன் கூறுகையில், மாற்றுத்திறனா ளிகளுக்கென அரசு இலவச பஸ்பாஸ் வழங்கி வருகிறது.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார்துறை வேலைகளுக்கு தின மும் சென்று வந்தனர். வருடம் ஒரு முறை புதுப்பிக்கும் பஸ்பாஸ் இந்த ஆண்டு 2020 மார்ச் 31 ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. பஸ்பாஸ் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்பட்ட நிலையில். கொரோ னாவால் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு 5 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு களையும் ஏற்படுத்தி, பொதுபோக்கு வரத்து தனிமனித இடைவெளியுடன் இயங்கலாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதகால மாக கொரோனா முடக்கத்தால் வாழ் வாதாரம் இழந்த மாற்றுத்திறனா ளிகள் தற்போது அவரவர் தொழில் களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
எனவே அவர்களுக்கான இலவச பஸ்பாஸ் புதுப்பித்துதர வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் வாரத் திற்கு ஒருமுறை மாற்றுத்திறனா ளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறும் சூழலில், தருமபுரி மாவட்டத்தில் மாதத்தின் முதல் திங் களும் மூன்றாவது திங்களும் முகாம் நடைபெறுகிறது. இதை மாற்றி வாரத்திற்கு ஒருமுறை நடத்த வேண் டும். மேலும்,தேசிய அடையாள அட்டைபெற மருத்துவர்களால் மாற்றுத்திறனாளிகள் அழைக்களைக் கப்படுகிறார்கள். மேலும் ஊனத்தின் தன்மைக்குரிய சதவீதம் வழங்காமல் குறைவான சதவீதம் வழங்கப்படு வதால், மாற்றுத்திறனாளிகள் அதி கம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஊனத்தின் தன்மைக்கேற்ப உரிய சதவீதம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகைகளை முன் வைத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவ லகத்தில் மனு அளித்ததாக தெரிவித் தார்.