தருமபுரி, பிப்.8- தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யில், 12 இடங்களில் தொலைத் தொடர்பு வசதியை உறுதிப் படுத்தும் வகையில், பிஎஸ்என்எல் கோபுரங்களை அமைத்து வேண்டு மென மத்திய அமைச்சர் ரவி சங்கரிடம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில் கூறியிருப்ப தாவது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போது மான தொலைத்தொடர்பு வசதி இல்லை. கரிமங்கலம் வட்டத் திற்குட்பட்ட ஜிட்டாண்டா ஹள்ளி,ஜக்கசமுத்திரம், பிக்கன ஹள்ளி, அண்ணாமலை ஹள்ளி ஆகிய கிராமங்களிலும், பென்னாகரம் வட்டம் பெருமா பலை, சித்திரபட்டி, செல்லாமுடி, எரியூர் கிராம பகுதியும், பாப்பி ரெட்டிபட்டி வட்டத்தில் வாச்சாத்தி, கலசபாடி, அரசநத்தம், தொல் தூக்கி ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவன டவர்கள் இல்லை. இதனால் மக்கள் அவதிப் படுகின்றனர். இந்த நவீன தொழில் நுட்ப உலகத்தில், இந்த பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தங் களது அத்தியாவசிய தேவை களுக்கான தொலைத்தொடர்பு சேவையை பூர்த்தி செய்ய இயல வில்லை. மேற்கண்ட பகுதிகளில் மட்டும் .ஏறத்தாழ 6,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அவர் களுக்குரிய, தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. மிகவும் ஆபத் தான மற்றும் அவசரமான நேரங் களில், ஆம்புலன்ஸ் வசதியைக் கேட்டுப் பெறுவதற்குக்கூட, தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தற்போது 5 ஜி அலைக்கற்றை எனும் அதிநவீன வசதியைநோக்கி நாட்டு மக்கள் சென்று கொண்டி ருக்கும் சூழ்நிலையில், தருமபுரி தொகுதியில் மக்கள், தங்களுக் கான, அடிப்படை தொலைத் தொடர்பு வசதியை பெறுவதில்கூட சிக்கல் நிலவுகிறது. இதற்கு தீர்வு காணும்பொருட்டு, இக்கிராமங் களை உள்ளடக்கிய பகுதிகள் அனைத்திலும், உடனடியாக, போதுமான எண்ணிக்கையில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கோபுரங்களை உடனடியாக அமைத்து தர மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என செந்தில்குமார் எம்.பி.,யிடம் உறுதியளித்தார்.