tamilnadu

img

அரூர் பெரிய ஏரியில் பனை மர விதைகள் நடும் பணிகள் எஸ்.செந்தில்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்

தருமபுரி, செப்.21- அரூர் பெரிய ஏரியில் பனை மர விதைகள் நடும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்து வர் எஸ்.செந்தில்குமார் சனியன்று துவக்கி வைத் தார்.  அரூர் வட்டாரப் பகுதியிலுள்ள நீர் நிலைகளில் சுமார் 4 லட்சம் பனை மர விதைகள் நடும் பணியை தன்னார்வ அமைப்புகள் தொடங்கியுள்ளன. இதைய டுத்து, அரூர் பெரிய  ஏரியின் கரைப் பகுதியில் பனை மர விதைகள் நடும் பணிகளை தருமபுரி எம்.பி மருத்துவர் எஸ்.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.   அப்போது அவர் கூறுகையில்,  பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாகும். நிலத்தடி நீரை பனை மரங்கள் பாதுகாக்கின்றன. பனை மரங்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை வளம், மண் அரிப்புகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் அரசு சார்பில் பனை மர விதைகள் நடும் பணிகள் நடைபெறுகிறது. எனவே தன்னார்வ அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் பனை மர விதைகளை அதிக அளவில் நட்டு வளர்க்க வேண் டும். அதேபோல்  புங்கன், வேம்பு உள்ளிட்ட மரங் களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.   முன்னதாக, இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செய லர் தேசிங்குராஜன், மு.கா.முகமது அலி, விண்ண ரசன், சந்திரமோகன், சிட்டிபாபு மற்றும் தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.