பென்னாகரம், ஜூலை 26- பென்னாகரத்தில் கொரோனா பாதித்த பகுதிகளை தடை செய்வ தற்கு பதிலாக, பென்னாகரம் நக ரத்திற்கு செல்லும் அனைத்து வழி களுக்கும் சீல் வைக்கப்பட்டதால் அப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தேவையான அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாகி னர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் நகரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வரு வாய்த்துறை அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மேல் நிலைப்பள்ளிகள், காவல் நிலை யம், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் அமைந்துள்ளன. இந்நிலையில், பென்னாகரத்தைச் சுற்றியுள்ள தாசம்பட்டி, ஏரியூர், கூத்தப்பாடி, பெரும்பாலை, கோடுப்பட்டி, பி.அக்ரகாரம், ஆதனூர், மாங்கரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது விளை பொருட்களை சந்தைப்படுத்தவும், வங்கி, மருத் துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் பென்னாகரத்திற்கு தான் வர வேண்டியுள்ளது. இந்நிலையில், பென்னாகரம் அருகே முள்ளுவாடி பகுதியில், கடந்த வாரம் 2 முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. இதையடுத்து மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 20ஆம் தேதியன்று உயிரிழந்தனர். அதேபோல், முள்ளுவாடி, தபால் அலுவலகம் தெரு, போயர் தெருவில் ஒருவ ருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் அப் பகுதிகளுக்கு சீல் வைத்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை எனக் கூறி, தொற்று பரவல் இல்லாத மற்ற பகுதிகளுக்கு செல்லும் வழிகளையும் தடுப்புகள் மூலம் அடைத்தனர்.
இதன் காரணமாக, பென்னாகரத்திற்கு வரும் அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டன. இங்குள்ள மளிகை கடை கள், பால் விற்பனை நிலையங் கள், வங்கிகள் அனைத்தும் மூடப் பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும், தடை செய்யப்பட்ட பகு திகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி களை, மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்யததால் அப்பகுதி கிராம மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி செயலாளர் கீதாவி டம் கேட்ட போது, உயரதிகாரி கள் சொல்வதை செயல்படுத்துவ தாகவும், வேறு ஏதேனும் சந்தே கம் இருப்பின், தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேளுங் கள், என்றும் தெரிவித்தார். கொரோனா பரவல் அதிகம் இல்லாத நிலையில், ஒட்டு மொத்த மாக பென்னாகரம் நகரம் முழு வதும் தடை ஏற்படுத்தியுள்ளது பொதுமக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளதென சமூக ஆர்வ லர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். (ந.நி)