tamilnadu

img

பென்னாகரம்: புதிய பேருந்து நிலையம் அமைத்திட கோரிக்கை

பென்னாகரம், அக்.3- பென்னாகரத்தில் பழு தடைந்த பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிய  பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள்,  மார்க்சிஸ்ட் கட்சியினர்  கோரிக்கை விடுத்துள்ள னர்.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூ ராட்சியில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி 1987 ஆம்  ஆண்டு பேருந்து நிலையம்  கட்டப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு  இப்பேருந்து நிலையம்  சுமார் 8.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  ஆனால் தற்போது இரண்டு ஏக்கர் பரப் பளவில் மட்டுமே பேருந்து நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது. 152 கடைகள்  உள்ளது.  இந்த பேருந்து நிலையத்திற்கு  பென்னாகரம் ஒன்றியத்தை சுற்றி  உள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல் கின்றனர்.  மேலும் சென்னை, புதுச்சேரி, தருமபுரி, சேலம், ஈரோடு, மேச்சேரி, ஒகேனக்கல், நெருப்பூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் மற்றும்  கிராமப்புறங்கள் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகிறது. தற்போது இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதன் காரணமாகவும் பேருந்துநிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு  உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.எம்.  முருகேசன் கூறுகையில், பேருந்து நிலை யத்தை முழுவதுமாக அகற்றி 8.5 ஏக்கரில்  நல்ல தரமான நவீன வசதிகள் அடங்கிய பேருந்து நிலையமாக அமைக்க வேண்டும். தற்போது பேருந்து நிலையத்தில் 152 கடைகள் உள்ளன. ஆனால் இந்த பேருந்து நிலையம் இடித்து புதியதாக  300க்கும் மேற் பட்ட கடைகள் கட்டப்படலாம். இதனால் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவருக்கும் கடைகளில் கிடைக்கும். இதனால் அவர்கள் எந்தவித சிரமமுமின்றி தொழில் செய்ய ஏதுவாக இருக்கும்.  மேலும் தருமபுரி மாவட்டத்தின் பிர தான சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் உள்ளதால், பென்னாகரம் பேருந்து நிலை யத்தில் இருந்துதான் ஒகேனக்கல்லுக்கு செல்லவேண்டும். வெளி மாவட்டம் மற்றும்  வெளி மாநிலங்களில் இருந்து வருபவர் களுக்கு ஏதுவாக கூடுதலாக பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது என அவர் தெரி வித்தார்.