tamilnadu

img

பெண்களை தற்கொலைக்கு துாண்டும் தனியார் நுண்நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கைக் கோரி மாதர் சங்கம் மனு

தருமபுரி, செப். 11- பெண்களை தற்கொ லைக்கு துாண்டும் தனியார் நுண் நிதி நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி  மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பிரவேஷ்குமாரிடம் அனைத்திந்திய ஜனநாயாக மாதர் சங்கத்தினர் மனு அளி தனர். இதுகுறித்து மாதர் சங்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி நகரத்தில் வாழும் பெரும் பகுதி ஏழை பெண்கள் தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று துணி வியாபரம், தையல்தொழில் போன்ற பல்வேறு சிறுதொழில் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத் தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இச்சமயத்தில் தனியார் நுண் நிதி நிறுவ னங்கள் கடன் தவணைக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், ஆதார் கார்டை முடிக்கி விடுவோம் என மிரட்டி வரு கின்றனர்.  இவ்வாறு, தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மிரட்டுவதால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை வீட்டு உரிமை யாளர் வீட்டை காலிசெய்யுமாறு வற்புறுத் துகிறார்.

இதனால் பெண்கள் தற்கொலை  செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகின்ற னர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதர் சங்கம் நடத்திய போராட்டத்தால் தனியார் நுண் நிதி நிறுவனத்திடம் பேச்சவார்த்தை நடத்தி, அரசு உத்தரவு வரும் வரை கடன் தொகையை வசூலிக்க கூடாது என கோட் டாட்சியர் உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவை மீறி கடன் தொகையை  வசூலித்தால் காவல்துறை மூலம் சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், தனியார் நுண்நிதி நிறுவனங்கள் கோட்டாட்சியரின் உத்த ரவை மீறி வசூல் செய்து வருகின்றனர். எனவே தனியார் நுண் நிதி நிறுவனங்கள் மீது மாவட்ட காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, இம்மனுவினை மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் துணைத் தலைவர் கே.பூபதி, நிர்வாகிகள் மாலா ஆயிஷா ஜாஸ்மின், லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அளித்தனர்.சட்டரீதியான