தருமபுரி, ஜூலை 17- மின்வாரியத்தில் துப்புரவு பணியிடங்களில் தினக்கூலியே இல்லாமல் பணிபுரிந்து வரும் பணி யாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய பிரிவு அலுவலகங் கள், துணைமின்நிலையங்களில் காலியாக உள்ள துப்புரவு பணியா ளர் பணியிடங்களில் தினக் கூலியே இல்லாமல் பணிபுரியும் பணியாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தருமபுரி மின்திட்டத்தில் துப்புரவு பணியினை மேற் கொண்டு 480 நாட்கள் பணிமுடித் தவர்கள் பட்டியலில் தயார் நிலையில் உள்ள 25 துப்புரவு பணி யாளர்களுக்கு பணிநிரந்தர உத் தரவு வழங்கவேண்டும். பகுதி நேர பணியாளர்களை முழுநேர பணியா ளர்களாக கல்வி தகுதிக்கேற்ப மாற்றுபணி வழங்கி நிரந்தர பணி யாளர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண் டும். பகுதிநேர துப்புரவு பணியா ளர்களுக்கு வாரியம் விதித்துள்ள 2 மணி நேர வேலை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அலுவலக துப்புரவு பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்துவதை கைவிட வேண்டும். மத்திய அர சின் ஒரே நாடு, ஒரே மின்சாரம் என்ற அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் டி. லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலை வர் ஜி.நாகராஜன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செய லாளர் பி.ஜீவா, மாவட்ட பொரு ளாளர் எம்.ஜெயக்குமார், தருமபுரி கோட்ட செயலாளர் ஜி.சக்திவேல், எம்.ஆர்.டி தலைவர் வி.சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.