நாமக்கல், ஜூலை 19- துப்புரவு பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் ஆயிரக் கணக்கான பகுதி நேர துப்பு ரவு பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். ஊதியம் வழங்காமல் துப்புரவு பணி செய்திடும் பணியாளர்க ளுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து பணி நிரந்தரம் செய்திட வேண் டும். பகுதி நேர துப்புரவு பணி யாளர்களை முழு நேர பணியா ளர்களாக நியமனம் செய்திட வேண்டும். பகுதி நேர பணியாளர் களுக்கு உள்முக தேர்வில் கல் வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கோட்டச் செயலா ளர் ஏ.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். துணை செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் கோரிக்கை களை விளக்கி சிறப்புறையாற்றி னார். சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ், ஒய்வு பெற்றோர் நல அமைப்பு நாமக் கல் கிளை செயலாளர் எம்.காளி யப்பன், ராசிபுரம் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் திருமூர்த்தி மகளிர் அணி பொறுப் பாளர் மல்லிகா, வெண்ணிலா, நாமக்கல் வட்ட கிளை பொரு ளாளர் கே.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.