tamilnadu

img

நூறுநாள் வேலை நிலுவை கூலியை உடனே வழங்கிடுக விவசாய தொழிலாளர்கள் சங்க பேரவையில் தீர்மானம்

தருமபுரி, பிப். 23- நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்குமாறு அகில இந் திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பாலக்கோடு ஒன்றிய பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் பாலக்கோடு ஒன்றிய பேரவை மல்லுப்பட்டி யில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் சி.ராஜா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்ட துணைத்தலை வர் கே.எல்லப்பன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந் திரன், ஒன்றியச் செயலாளர் ஜி.நக்கீரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பாலக்கோடு வட்டம், காரிமங் கலம் ஒன்றியத்தில் உள்ள ஜிட்டாண்ட அள்ளி, பிக்கன அள்ளி, ஜக்கசமுத்திரம், அண்ணா மலைஅள்ளி, மகேந்திரமங்கலம் ஆகிய ஊராட்சிகளை பாலக் கோடு ஒன்றியத்தில் இணைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் கீழ் ஆண்டுக்கு நூறுநாள் வேலையை 250 நாட்களாக அதிகரித்தும், தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பணி யாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை கூலியை உடனே வழங்க வேண்டும். வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட முதி யோர் உதவித்தொகையை வழங்க வேண்டும். குண்டாங்காட்டை தலைமையிடமாகக் கொண்டு ஜிட்டாண்டஅள்ளி, ஜக்கசமுத்தி ரம் ஆகிய மலைக் கிராமங்களை உள்ளடக்கி தனி பஞ்சாயத்தாக உருவாக்க வேண்டும். காரிமங்க லத்தில் இருந்து பிக்கன அள்ளி, குண்டாங்காடு, பேடரஅள்ளி, நீல கிரிகொட்டாய் வரை அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும். குண்டாங்காடு ரேசன் கடையை பிரித்து முத்துராயன்கோயில் கிராமத்தில் புதிய ரேசன்கடை அமைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
ஒன்றிதலைவராக முருகன், ஒன்றியச் செயலாளராக சி.ராஜா, பொருளாளராக மாதேஷ் உள் ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.