தருமபுரி:
சேலத்திலிருந்து ஞாயிறன்று காலை (27-ம் தேதி) சரக்கு ரயில் ஒன்று ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த ரயிலின் ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத் தில் இருந்து தடம்புரண்டது. இதை அறிந்த சரக்கு ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டியை தொழில் நுட்ப பணியாளர்கள் மூலம் சரி செய்யும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தால் அவ்வழியே செல்லும் இதர சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்குவதில் அப்பகுதியில் சிறு தாமதம் ஏற்பட்டது.இருப்பினும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரயில் தடம்புரண்ட பாதையை சீரமைத்தனர்.