tamilnadu

img

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கும் அவலம்

தருமபுரி ஜூன 13- பேளாரஹள்ளி ஊராட்சியில் கழிவுநீர் சாலையில் குட்டைபோல் தேங்கி நோய்தொற்றும் அவலநிலை ஏற் பட்டுள்ளது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட் டது பேளாரஹள்ளி ஊராட்சி.

இங்கு   அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளி, அல்ராஜிகவுண்டர் தெரு, தொட்டம்பட்டி பிரி வுசாலை, புதூர்மாரியம்மன் கோவில் தெரு, புறவழிச் சாலை, நான்குரோடு வரை  போதிய சாக்கடை கால்வாய்  வச தியில்லை. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் வணிக நிறு வனங்களிலிருந்து வரும் கழிவு நீர்கள் ஆங்காங்கே குட்டை  போல் பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. மேலும், மழை காலங்களில் மழைநீரும், கழிவு நீரும் கலந்து சலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் துர் நாற்றம் வீசுவது மட்டுமின்றி, கொசு உற்பத்தியாகி பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

கழிவு நீர் பாதிப்பு குறித்து பலமுறை ஊராட்சி தலைவர் மற்றும் வட் டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.