தருமபுரி, ஏப்.8-எண்ணெகொள்புதூர்- தும்பலஅள்ளி அணைக்கட்டு நீர் திட்டம் அமைக்கப்படும் எனதருமபுரி நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ.செந்தில்குமார் திங்களன்று காரிமங்கலம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நான் உள்ளூரைச் சேர்ந்தவன், மக்களின் பிரச்சனைகளை அறிந்தவன். மாவட்டத்தின் அடிப்படை பிரச்சனையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பல அள்ளி அணைக்கு – தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே –என்னேகொள்புதூர் என்ற இடத்தில் அமைய உள்ள புறக்கால்வாய்த் திட்டம் மீண்டும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச்செயலாளர்கள் குமரவேல், மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன், இலக்கிய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் பி.சி.ஆர்.மனோகரன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் மகேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சித்தையன், சரவணன்,பாலு, வழக்கறிஞர் வெங்கடேஷ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பி.ஜெயராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இப்பிரச்சாரம் கொட்டுமாரன அள்ளியில் துவங்கி அத்தனூர், துமபல அள்ளிடேம், புளிக்கல், கொள்ளுப்பட்டி, பொம்ம அள்ளி,கொண்டக அள்ளி, சொன்னப்பட்டி, எலும்பிச்சன அள்ளி, கருக்கன அள்ளி, அண்ணாமலை அள்ளி, வெலகல அள்ளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்து எடுத்து மேளதாளத்துடன் வரவேற்றனர்.