tamilnadu

img

அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.3- அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் புதனன்று பென்னாகரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது. அப்போது அவர் வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குசேகரித்து பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டால் உங்களின் வீடுதேடி குறைகேட்டு நிவர்த்தி செய்வேன். திமுக ஆட்சிகளாலத்தில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கையெடுக்கப்படும். நூறுநாள் வேலைத்திட்டத்தில்பல கிராமங்களுக்கு வேலைதரவில்லை. காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வந்த உடன் நூறுநாள் வேலைதிட்டத்தில் 150 நாட்களாக வேலைவழங்கப்படும். சட்டப்படியான கூலிவழங்கநடவடிக்கை எடுக்கப்படும். பென்னாகரம் வட்டத்தில்பல்வேறு கிராமங்களில் குடிநீர்பிரச்சனை உள்ளது. ஒகேனக்கல்குடிநீர் அனைத்து கிராமங்களுக்குகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பண்ணவாடிக்கும், சேலம் மாவட்டம் கோட்டையூருக்கு இடையே காவிரி ஆறு ஓடுகிறது, இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குருக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே எனக்குஉதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கிராமமக்களை கேட்டுக்கொண்டார்.இந்த பிரச்சாரத்தின் போது, திமுக சார்பில் பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ, பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சி.செல்வராஜ், என்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், வே.விஸ்வநாதன், ஏரியூர் ஒன்றியச்செயலாளர் முருகன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்எஸ்.தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர் காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர்கருப்பண்ணன் உள்ளிட்ட கூட்டணிகட்சி தலைவர்கள், நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்.இப்பிரச்சாரம் மடத்தில் துவங்கி கூத்தப்பாடி, மூங்கில்மடுவு, ஏரியூர், பொச்சாரம்பட்டி, அஜ்ஜன அள்ளி, நெருப்பூர், நாகமரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு மேளதாளத்துடன் கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.மாதர் சங்கம் ஆதரவு பிரச்சாரம்இதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி நகரம் அண்ணாசாகரம் பகுதியில் வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணை தலைவர் கே.பூபதி நிர்வாகிகள் நிர்மலாராணி, தமிழ்மணி, கவிப்பிரியா, மங்கை, மலர்விழி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் வி.பி.சாமிநாதன் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். மனைப்பட்டா கிடைக்கவும். கேஸ்விலையை குறைக்கவும், விலைவாசியை குறைக்கவும்,பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பெற தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டனர்.