tamilnadu

தருமபுரி: சட்டப் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்

தருமபுரி, மே 16-தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்டப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவங்கியது. தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும்,தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். தலித் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் ரூ.250-க்கான இந்தியன் வங்கி சலான் மற்றும் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பித்து விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம். இதர பிரிவைச் சேர்ந்தமாணவ, மாணவிகள் ரூ.500-க்கான இந்தியன் வங்கி சலான் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். (இந்தியன் வங்கி சலான் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படும்). விண்ணப்பங்கள் பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் மே 31 ஆம் தேதி ஆகும்.இதேபோல், மூன்றாண்டு சட்டப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கைகான விண்ணப்பங்கள் மே 28 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறுமாரு தருமபுரி அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ப.சிவதாஸ் தெரிவித்துள்ளார்.