தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், தருமபுரி, அரூர் (தனி), பாப்பிரெட்பட்டி, பாலக்கோடு பென்னாகரம், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தருமபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்திலிருந்து 1965 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 50 ஆண்டுகள் நிறைவுபெற்று பொன்விழா கண்ட தருமபுரி மாவட்டம் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை.இந்தச்சூழலில், தருமபுரி மாவட்டத்திலிருந்து வேலைதேடி குடிபெயர்தலைத் தடுக்க தருமபுரியில் சிப்காட் அமைப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார்.இதற்காக 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்த நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது. மாவட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில்நீர்ப்பாசன திட்டம் அமல்படுத்தப்படும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஒகேனக்கல்லில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். ரூ.10 கோடி செலவில் புதிதாக வத்தல் மலை சுற்றுலா தலம் உருவாக்கப்படும். போன்ற அறிவிப்புகள், அறிவிப்புகளகவே உள்ளன. நிறைவேற்ற ஆளுகின்றவர்கள் எதுவும் செய்யவில்லை.2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் துவக்கப்பட்டு சுமார் 60 சதவிகித கிராமங்களுக்கு குடிநீர் சென்றது.
2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுக அரசு அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கவில்லை.ஏரியூர், கடத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை புதிதாக உருவாக்குவோம் என சட்டமன்றத்தில் அறிவித்தனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதிமுக ஆட்சியின்கடந்த 8 ஆண்டுகாலத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தாமல் வெற்று அறிவிப்பாகவே உள்ளன. இப்போது, நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மீண்டும் அவற்றையே வாக்குறுதியாக்க் கூறுவது மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை.தருமபுரி தொகுதியில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணிஇராமதாஸ் நான் வெற்றிபெற்றால் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து பெருநிறுவனங்களை வரவழைத்து தொழிற்பேட்டை உருவாக்குவேன் என்றார். கல்வியிலும் சுகாதாரத்திலும் மாவட்டத்தை முதன்மையாக்குவேன். சிறுதானிய விளைச்சலை விவசாயிகளை, ஊக்கப்படுத்தகொள்முதல் நிலையம் அமைப்பேன், விவசாயத்தை மேம்படுத்த நீர்பாசன திட்டங்களை மேம்படுத்துவேன் என பல பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால்,வெற்றி பெற்ற அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட முடியாமல் அதிமுக அரசு திட்டமிட்டு முடக்குகிறது என்று மருத்துவர் அன்புமணி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ஆனால், இப்போது அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது அவரது கட்சி. கடந்த 5 ஆண்டுகாலத்தில் தருமபுரி-மொரப்பூர் ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு மத்திய பாஜக அரசிடம் 19 முறைவலியுறுத்தினேன் என்று கூறினார். எதற்கும் அசையாத பாஜகவோடும் இப்போது கை சோர்த்திருக்கிறார். கடைசியில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்துதேர்தல் அறிவிப்பு வெளிவர சிலதினங்களுக்கு முன் தருமபுரி-மொரப்பூர் ரயில்வே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த5 ஆண்டுகாலமாக நிறைவேறாமல் இருந்த இந்த திட்டத்துக்கு இப்போது அடிக்கல் நாட்டியதுதேர்தலுக்காக பெயரளவிலானதுதான், நிறைவேறாது எனபொதுமக்கள் கூறி வருகின்றனர்.எனவே இந்த கூட்டணியைபொதுமக்கள் ஏற்றுகொள்ளவில்லை. ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிகளுடன் கூட்டுவைத்து தேர்தலை சந்திக்கும் மருத்துவர் அன்புமணி மாவட்டமக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார். பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி.பழனியப்பன் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்.
தற்போது அமமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். அதிமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடிவில்லை என்பதால் மக்களின் நம்பிக்கையைஇவரால் பெற முடியவில்லை.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின சார்பில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் செந்தில்குமார் திமுகவில் இளைஞர் அணியின் நிர்வாகியாக உள்ளார். மருத்துவரான இவர் மக்கள் சேவையாற்றி வருகிறார். முதன்முதலில் தேர்தல்களம் கானும் இளைஞராவரார்.கடந்த முறை எம்பியாக இருந்தவ அன்புமணியை சந்திக்கவேண்டும் என்றால் திண்டிவனம் செல்லவேண்டும். ஏற்கெனவே கொடுத்த வாக்குறுத்களை நிறைவேற்றாத நிலையில் தான் மீண்டும் அன்புமணி போட்டியிடுகிறார். மண்ணின் மைந்தனாகிய என்னை வெற்றிபெற செய்தால் எந்தநேரத்திலும் மக்களை சந்தித்து குறைகளைகேட்பேன் என்ற மருத்துவர் எஸ்.செந்தில்குமாரின் வாக்குறுதி மக்களிடையே வரவேற்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே திமுக வேட்பாளரான இவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.(ந.நி)