தருமபுரி, ஏப்.3-
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் சார்பில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் தருமபுரி நகரம் பாரதிபுரம், குமரபுரிகாலணி, இபிகாலணி உள்ளிட்ட இடங்களில்வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில், திமுக முன்னாள் கவுன்சிலர் ரேனுகாதேவி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி நிர்வாகிகள் நிர்மலாராணி, கல்பனா, மாது, மல்லிகா, காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகிகள் காளியம்மாள், லட்சுமி, பட்டு, ரோஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இப்பிராச்சாரத்தில் ஏழைகளுக்கு மனைபட்டா கிடைக்கவும், நீண்டஆண்டுகாலம் வீடுகட்டி குடியிருபோருக்கு மனைபட்டா மற்றும்ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் கேஸ்விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை குறைக்கவும், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு பெற தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டனர்.