tamilnadu

img

ஆபத்தான பரிசல் பயணம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து உள்ள நாகமரை காவிரிக்கரையில் அமைந்துள்ளது. மேட்டூர் அணை தனது  முழு கொள்ளளவை எட்டும் காலங்களில் நாகமரை வரை தண்ணீர் தேங்கி காணப் படும். இதனால் இப்பகுதி கடல் போல்  காட்சியளிக்கும். இங்கு நாள்தோறும் நாகமரை பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து கொளத்தூர் வரை பரிசல் இயக்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் நாகமரை, ஏரியூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 45க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் மாண வர்கள் பண்ணவாடியிலிருந்து கொளத்தூர் வரை பரிசல் பயணம் மேற்கொண்டு வரு கின்றனர். தண்ணீர் குறைவாக வரும் காலங் களில் பரிசல் இயக்குவதில் எவ்வித ஆபத்தும் இருப்பதில்லை. ஆனால் மேட்டூர்  அணை தனது முழு கொள்ளளவை எட்டும்  காலங்களில் மக்கள் ஆபத்தை உணராமல் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின் றனர்.  இந்நிலையில்,  இப்பகுதி மக்கள்  தருமபுரி மற்றும் சேலத்திற்கு செல்ல  வேண்டுமானால் பென்னாகரத்தை   சுற்றி 70 கிமீ கடந்து சென்று வர  வேண்டும். ஆனால் பண்ணவாடி யிலிருந்து பரிசல் மூலம் 20 கிமீ சென்றால்  மேட்டூரை அடைந்துவிடலாம்.  இதனால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர். பண்ணவாடியிலிருந்து கொளத்தூர் வரை ஆற்றின் குறுக்கே ஒன்றரை கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டினால் போதுமானது. அதேபோல் கோட்டையூர் துறையிலிருந்து குறுக்கே அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைத்தால் ஆற்றை எளிதாக கடந்து செல்ல முடியும். இதனால் இப்பகுதி மக்கள்  கல்வி மற்றும் மருத்துவத்திற்காக  மேட்டூர்  வருவது சுலபமாக இருக்கும். எனவே இந்த  பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக பண்ணவாடியிலிருந்து கொளத் தூர் வரையில் பாலம் அமைக்க வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால் அரசு  பாலம் அமைப்பதற்கான எந்த நடவ டிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் மக்கள் ஆபத்தை உணராமல் பரிசல் பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே தமிழக அரசு எவ்வித அசம்பா விதமும் ஏற்படுவதற்கு முன விரைவாக பாலம் அமைக்க வேண்டும். அதுவரை   முறையான பரிசல் இயக்குவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பி. முருகன் கூறுகையில், ஏரியூர் ஒன்றியத் திற்குட்பட்ட சுமார் 45க்கும் மேற்பட்ட  கிராம மக்கள் விவசாய விளைபொருட் களை கொளத்தூர் சந்தையில் விற்பதற் காக எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாகமரை ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தால் விரைவாக பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். மேலும் போக்குவரத்து செலவு குறைவு.   தற்போது பாலம் இல்லாத காரணத்தால் சுமார் 70 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு  போதிய விலை கிடைக்காத நிலையில், தங்களது பொருட்களை விற்க சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருவ தால் வீண் விரயச் செலவுகள் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மற்றும் கல்வி, மருத்துவத்திற்கு ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட மக்களுக்கு மேட்டூர் மற்றும் சேலம் செல்வதற்காக இந்தப் பாலம் பேருதவியாக இருக்கும். எனவே நாகமரை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினர். - ஆ.ஜீவானந்தம்