tamilnadu

img

இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் தோழர் எம்.ஆறுமுகம் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்

தருமபுரி, நவ.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.ஆறுமுகம் அவர்களின் படத்திறப்புவிழா மற்றும் நினை வேந்தல் கூட்டம் பென்னாகரத் தில் சனியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளருமான தோழர் எம்.ஆறுமுகம் 1978-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். கல்லூரி காலம் முதல் தன்வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். விவசாயிகளின் நலனுக் கும், கந்து லேவாதேவி கொடு மையை எதிர்த்தும், கிராமப்புற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும், குத்தகை விவசாயிகளுக்கு ஆத ரவாகவும், காவல்துறை அத்துமீற லுக்கு எதிராகவும் போராடி சிறை  சென்றவர். உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்வு செய்யப்பட்டு பல் வேறு பொறுப்பு வகித்தவர் தோழர் எம்.ஆறுமுகம். உடல் நலக்குறைவால் கடந்த அக்டோ பர் 25 ஆம் தேதியன்று காலமா னார். தோழர் எம்.ஆறுமுகம் அவர் களின் படத்திறப்புவிழா மற்றும் நினைவேந்தல் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். தோழர் எம். ஆறுமுகம் உருவப்படத்தை திறந்து வைத்து மாநிலச் செய லாளர்  கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, கம்யூனிஸ்ட் இயக் கத்திற்கு ஏராளமான வரலாறு  இருக்கிறது. மற்றகட்சிகளை  ஒப்பிடும்போது வரலாற்றில்  கம்யூனிஸ்டுகள் தான் முதன்மை  இடத்தில் உள்ளனர். இப்போது  கம்யூனிஸ்ட் கட்சியின்  நூற்றாண்டு விழா கொண்டாடி  வருகிறோம்.

ஒவ்வொரு ஊழியரும் தியாகம் புரிந்து தன்னலம் மறந்து கட்சியில் இருக்கிறார்கள். தோழர் ஆறு முகம் போன்றோர் பென்னா கரம் பகுதியில் போராடவில்லை என்றால் கந்துவட்டி, நிலச்சுவான் தார்கள், பண்ணையார்கள்  போன்றோர் மக்களை அடிமைப் படுத்தியிருப்பார்கள். விவசாய குடும்ப பெண்களுக்கு பாதுகாப்பு இருந்திருக்காது. அனைத்துப் பகுதி சமூக மக்களின் நலனுக்காக போராடியிருக்கிறார். விவசாயி களுக்கு நிலம் பெற்று தந்திருக் கிறார். நில உரிமையை உறுதி செய்த இயக்கம் செங்கொடி இயக்கம். தாழ்த்தப்பட்ட மக்க ளுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை மற்றும் சலு கைகளுக்காக போராடியவர் தோழர் ஆறுமுகம்.  செங்கொடி இயக்கத்தை உருவாக்கும்போது காவல்துறை யின் அடக்குமுறை, பண்ணையா ரின் அடக்குமுறை மற்றும் வர்க்கப் போராட்ட பிரிவினைவாதிகளின் தாக்குதலை எதிர்த்து போராடி களத்தில் வெற்றி கண்டவர். தோழரின் மொத்த குடும்பத் தையே காவல்துறை தாக்கியது. வீட்டை இடித்து தரைமட்ட மாக்கினர். காவல்துறையினர் தாக்குதலை எதிர்கொண்டு உறு தியோடு நின்ற மகத்தான தலை வர் தோழர் ஆறுமுகம். இதனால் தான் சாதி,மதம் கடந்து அரசியல் வேறுபாடில்லாமல் ஆயிரக்க ணக்கான மக்கள் தோழருக்கு அஞ்சலி செலுத்தினர். இவரு டைய போராட்டத்திற்கு உறு துணையாக அவருடைய துணை வியார் ஜோதியும், குடும்பமும் இருந்துள்ளது. சமூக நீதிக்கான போராட்டத்தோடு, அவருக்கு ஏற்பட்ட நோய் தாக்குதலையும் சேர்த்து போராடினார்.

தோழர் எம்.ஆறுமுகம் இளம் கம்யூனிஸ்டு களுக்கு வழிகாட்டியாகவும், ஒரு பாடமாகவும் திகழ்ந்தார் என புகழாரம் சூட்டினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பணியாற்றி யவர் தோழர் ஆறுமுகம். சிறு பான்மை மக்களின் நலனுக்காக வும் போராடியவர். இவரின் வாழ்க்கையை ஒருபாடமாக இளம்தலைமுறையினர் எடுத் துக் கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார். மாநிலசெயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் பேசுகை யில், தோழர் ஆறுமுகம் அவர்க ளின் அரை நூற்றாண்டு கால  வாழ்க்கையில் செங்கொடி இயக்கத்திற்காக ஆற்றிய  பணி முக்கியமானது. உழைப் பாளி மக்களுக்காக பணி யாற்றி, மக்களின் நம்பிக்கையை  பெற்றவர். மார்க்சிய நிலை பாடு, கோட்பாட்டை பாதுகாக்க  கட்சியில் போராடினார் என  குறிப்பிட்டார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் பேசுகையில், தோழர் ஆறுமுகம் செங்கொடி இயக்கத்தின் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். கட்சி சரியாக முடிவெடுக்கவும், முடிவெடுத்ததை அமல்படுத்தவும் உறுதியாக இருந்தவர். அவரு டைய லட்சியத்தை இந்த மாவட் டம் முழுவதிலும் உள்ள கிராமங் களில் செங்கொடி இயக்கத்தை அமைக்க வேண்டும் என கேட் டுக்கொண்டார்.

மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில், 1974-ம் ஆண்டில் தருமபுரி அரசு  கல்லூரியில் மாணவர் சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதன்பின் செங்கொடி  இயக்கத்தில் இணைத்துக் கொண்டு உழைப்பாளி மக்களுக் காக போராடியதால், மக்கள்  செல்வாக்கு பெற்றார். மாவட்டச்செயலாளர் ஏ.குமார் பேசுகையில், தோழர் எம்.ஆறுமுகம் மறைவுக்கு பட்டிதொட்டியெல்லாம் உரு வப்படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன் நின்ற வர். மக்களின் பிரச்சனைகளுக் காக போராடி மக்கள் தலைவராக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டி னார். முன்னதாக, பென்னாகரம் பெரியார் சிலையிலிருந்து தொடங்கிய மெளன ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக படத் திறப்பு விழா நடைபெறும் அரங் கத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன்,  பி.இளம்பரிதி, எம்.மாரிமுத்து, எம்.முத்து, ஆர்.சிசுபாலன், சி.நாகராசன், கே.என்.மல்லையன், சோ.அருச்சுணன், டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கிரை ஸாமேரி, வே.விசுவநாதன், இடைக்கமிட்டி செயலாளர்கள் பென்னாகரம் நகரம் எஸ்.வெள் ளிங்கிரி, ஒன்றியம் கே.அன்பு, ஏரியூர் என்.பி.முருகன், பாப்பாரப் பட்டி ஆர்.சின்னசாமி, சின்னம் பள்ளி ஜி.சக்திவேல் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான கட்சி ஊழியர் கள் கலந்து கொண்டனர்.  நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம்.முருகேசன் நன்றி கூறி னார்.