மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர் எம்.ஆறுமுகம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மருத்துவமனைக்கு நேரில் சென்று தோழரது குடும்பத்தாரிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, வி.மாதன், கே.என்.மல்லையன், வே.விசுவநாதன், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு ஆகியோர் உள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில செயற்குழு உறுப்பினர் ந.நஞ்சப்பன்,மாவட்டசெயலாளர் எஸ்.தேவராசன் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.