தருமபுரி, டிச.31- தருமபுரியிலுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி யருமான எஸ்.மலர்விழியை மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி யினர் சந்தித்து அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, தருமபுரி மாவட் டத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதி களில் உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங் களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங் களிலும் நடைபெறுகிறது. அதேசமயம் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணும் மையத்தில் கண் காணிப்பு கேமிரா அமைத்து பதிவு செய்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். பாரபட்சமின்றி, ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவினை திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி எம்.எல்.ஏ.,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஏ.குமார் , மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்கராசு ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்தனர்.