பென்னாகரம், செப்.11- கடைமடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் வழங் காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவ தாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரி வித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த கடைமடையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கடைமடை தொடக்க வேளாண்மை வங்கியில் விவ சாய கடன்கள் வழங்காமல் அழைக்கப்படு வதாகவும், கடன் வழங்க லஞ்சம் கேட்பதாக வும் அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் கூறுகையில், நாங்கள் இந்த வங்கி யில் நீண்ட காலங்களாக உறுப்பினர்களாக உள்ளோம். கடந்த 3 மாத காலமாக விவசாய கடன் கேட்டு வருகிறோம். ஆனால் கடன் கொடுக்காமல் வங்கி செயலாளர் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறார். தங்க ளுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறார். வங்கி சேவைகளை பெறுவதற்கு கூடுதலாக பணம் வசூலிப்ப துடன், லஞ்சமாக பணம் கொடுப்பவர்க ளுக்கு மட்டுமே கடன்களை வழங்குகிறார். இவ்வாறு விவசாயிகள் குற்றஞ்சாட்டு கின்றனர்.