தருமபுரி, ஏப்.16-அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமாரை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது.அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழைத்தோட்டம்,கீரைப்பட்டி, வள்ளிமதுரை ஆகிய இடங்களில் வாக்குசேகரித்தனர். இதில், திமுக தீர்மானக்குழு உறுப்பினர் கீரை.விஸ்வநாதன், செந்தாமரைக்கண்ணன், ஒன்றியசெயலாளர் தேசிங்குராஜன், சண்முகநதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், ஒன்றியசெயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டகுழு உறுப்பினர்கள் சி.வேலாயுதம், பி.வி.மாது, ஒன்றியகுழு உறுப்பினர்கள் கே.என்.ஏழுமலை, எஸ்.கே.கோவிந்தன், ஏ.நேரு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.