tamilnadu

img

5 சிலைகள் கடத்தலா? தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி:
தருமபுரி, அதியமான்கோட்டை பெருமாள் கோவில் வளாகத்தில் மர்ம நபர்கள் வைத்துச் சென்ற பையில் இருந்த 5 சாமி சிலைகளை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.பழமையான அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவிலில் இரவு காவலராக பணியாற்றும் ரவிக்குமார், கோவில் வளாகத்தில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். அதை பிரித்ததில் பூதேவி, தேவி, பெருமாள், கருடாழ்வார், நாகர்சிலை பீடம் ஆகிய 5 சிலைகளும் நான்கு தங்க நிற தாலி காசுகள் இருந்துள்ளது.  இதுகுறித்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும்  அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து அங்குவந்த காவல்துறையினர், அதிகாரிகள் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சவுகத் அலி ஆகியோருடன் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அந்த சிலைகள் நல்லம்பள்ளி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலைகள் எந்த உலோகத்தால் செய் யப்பட்டது,  கோவில் வளாகத்தில் வைத்துவிட்டு சென்றது யார், கடத்தப்பட்ட சிலைகளா? என்பவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.