மார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
மொத்தவிற்பனை விலை(WholeSale Price Index) குறியீடு உற்பத்தி பொருள்களின் அளவு மற்றும் தேவை ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். உணவு மற்றும் பெட்ரோல் மீதான மொத்த விற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் இந்தாண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 2.74 சதவிகிதமாக இருந்தது. தொடர்ந்து பிப்ரவரியில் 2.76 சதவிகிதமாக உயர்ந்த பணவீக்கம் மார்ச் மாதம் முடிவில் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
உணவு பொருள்கள் (பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள்) மொத்த விற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.41 சதவிகிதமாக இருந்தது. பின்பு பிப்ரவரியில் 4.28 சதவிகிதமாக அதிகரித்த பணவீக்கம் மார்ச் மாதம் முடிவில் 5.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் உணவு பொருள்களின் விலை அதிகரித்தவாறு இருந்திருக்கும்.