பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறி, முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களை ஒரே மாதிரியாகப் பாதிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அதன் தளர்வான கொள்கையைப் பராமரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பொருளாதார வல்லுநர்கள், பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறி, முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களை ஒரே மாதிரியாகப் பாதிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பெரும்பாலான சந்தைப் பங்கேற்பாளர்கள் பணவீக்கத்தைக் கையாள்வதில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே பின்தங்கியிருப்பதாகக் கூறுகின்றனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் வழங்கும் தானியங்கள், எரிசக்தி மற்றும் பிற ஏற்றுமதிகளுக்கான விலைகள் உயரும். போரின் விளைவாகவும் மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாகவும் விலை அழுத்தம் தொடரும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.