அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் உதவி ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டிருப்பது வரலாறு ஆகியுள்ளது. முதல் கறுப்பின மற்றும் இந்திய வம்சாவளி வேட்பாளர் என போற்றப்படுகிறார். ஆனால் 1968ம்ஆண்டே முதல் கறுப்பின பெண் சார்லின் மிட்சல், கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜனாதிபதிக்கு போட்டியிட்டார். ஏன்அது குறிப்பிடப்படுவது இல்லை? ஜனநாயகம்/ சோலிசத்துக்கான போராட்ட வரலாற்றை போற்றுவோம்.
அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி
---------------------
நமது மட்டற்ற மகிழ்ச்சியில் ஒன்றை மறந்துவிட கூடாது. கமலா ஹாரிஸ் ஒரு அமெரிக்கர். அவரது தாயார் இந்தியர் என்பதால் நமக்கு சிறிதளவு உரிமை உள்ளது என நாம் நினைத்தால் ஜமைய்க்கா தேசத்திற்கும் அந்த உரிமை உள்ளது. ஏனெனில் அவரது தந்தை ஜமைய்க்கா தேசத்தவர்
வரலாற்றாசிரியர், ரஞ்சித் ஹோஸ்கோட்
---------------
கோவாவில் ராமர் ராஜ்யமா? முதலில் ஒரு பெரிய சூதாட்டம் நடத்துபவர் பா.ஜ.க.வில்! பின்னர் பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர் பா.ஜ.க.வில்! இப்பொழுது மறைந்த மனோகர் பரிக்கரால் போதை மருந்து கடத்தல்தலைவன் என வர்ணிக்கப் பட்டவர் பா.ஜ.க.வில்! ஹே ராம்!
பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய்
---------------
அவசரநிலை காலம் குறித்த வரலாற்றை எழுதியவன் என்ற முறையில் உறுதியாக சொல்கிறேன். இந்தியாவில் இன்று நடப்பது அதைவிட மோசமானது. ஆபத்தானது. சட்டம்பற்றி பேருக்கு கூடகவலை இல்லை ஆட்சியாளர்களுக்கு! ஊடகங்கள் அவர்கள் கட்டுப்பாடில்! பொய்களையும் வெறுப்பையும் அடிப்படையாக கொண்ட ஆட்சியை முட்டுக்கொடுப்பதற்கு கலகக் கும்பல்கள் தயாராக உள்ளன.
வரலாற்றாசிரியர்/ பேராசிரியர் கியான் பிரகாஷ்..
--------------
புதிய தொற்று மற்றும் மரணத்தில் இந்தியா முதலிடம் என்ற சுமந்த் ராமன் பதிவுக்கு பதில்: என்ன சார் பொசுக்கன்னு இப்டி இந்தியா சீக்காளி நாடுங்கற மாதிரி சொல்லீட்டீங்க. வேல் பூஜைலாம் செஞ்சிருக்கோம். கடவுள் பாத்துப்பார் சார். முருகன், ராமர் எல்லாரும் இந்தியாவை காப்பாத்துவாங்க சார்.
பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியன்
--------------
உலக வங்கி மதிப்பீட்டின்படி 173 நாடுகள் தமது மக்களுக்கு செய்தகோவிட் உதவி என்பது 50%நேரடி நிதி உதவி; 25% இலவச உணவு; 25% கடன் தொடர்பானது. ஆனால் இந்தியாவில்? 60% கடன்; 10% மட்டுமேநேரடி நிதி உதவி. மக்களுக்கு நேரடி நிதி தரும் ஒரு திட்டம்தான் இன்றைய உடனடி தேவை.
தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்
--------------
சமூக சுகாதார ஊழியர்களுக்கு (ASHA) அமித்ஷாவின் காவல்துறை அளித்த பரிசு முதல் தகவல்அறிக்கைகள். ஏன்? ஊதியத்தை கேட்ட அவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லையாம். இந்தபெண்கள்தான் கோவிட் காலத்தில் தமது உயிரை பணயம் வைத்து செயலாற்றும் முன்கள போராளிகள்! ஒரு சந்தேகம்! இராமர் கோவில் பூஜை நிகழ்ச்சியின்பொழுது தனிமனித இடைவெளி இல்லையென ஏதாவது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
சிபிஐ(எம்) மத்தியக்குழு
=====
தொகுப்பு : அ.அன்வர் உசேன்