கடலூர், ஜன.21-
கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு;
நிறுவனம்: கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 14
பணியிடம்: கடலூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Vet) - 01
சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700
பணி: Deputy Manager (QC)/(DC) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800
பணி: Executive (Office) - 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
பணி: Executive (Lab) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600
பணி: Junior Executive (Office)/(Purchase) - 03
பணி: Private Secretary (Grade-III) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயதுவரம்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Light Vehicle Driver - 02
பணி: Technician (Electrical) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: Senior Factory Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32க்குள்ளும், மற்ற பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை சேத்தியாத்தேப்பில் மாற்றத்தக்க வகையில் The General Manager, Cuddalore DCMPU Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.</p>
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு அஞ்சலில் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Ltd., Sethiathope
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2021
தகுதி மற்றும் மேலும் விவரங்கள் அறிய: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf/dc57a544-627e-b09b-943d-0027564c6ba5 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்