tamilnadu

img

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்டீல் ஏற்றுமதி சரிவு

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்டீல் ஏற்றுமதி சரிந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதத்தில், இந்தியாவில் இருந்து 3,19,000 டன் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாத ஏற்றுமதியை விட 28% குறைந்துள்ளது.  அதே போல் கடந்த ஏப்ரல் 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஸ்டீல் ஏற்றுமதி அதிக சரிவு கண்டுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்கா விதித்த 25 சதவீத இறக்குமதி வரி அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஸ்டீல் ஏற்றுமதி 55 சதவீதம் சரிந்துள்ளது. இதில், இத்தாலி நாட்டுக்கான ஏற்றுமதி 65 சதவீதமும் (23,000 டன்), ஸ்பெயின் நாட்டுக்கான ஏற்றுமதி 41 சதவீதமும் (13,000 டன்), பெல்ஜியம் நாட்டுக்கான ஏற்றுமதி 42 சதவீதமும் (25,000 டன்) சரிந்துள்ளது. மேலும், ஸ்டீல் காயில், கேல்வனைஸ்ட் ஸ்டீல் உள்ளிட்ட ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி 30 சதவீதம் சரிந்துள்ளது.

அதே போல், இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்படும் நேபாளத்தில் 22 சதவீதம் (63,000 டன்) சரிந்ததுள்ளது. மேலும், மலேசியா , இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் தட்டுகள் 60 சதவீதம் (14,000 டன்) குறைந்துள்ளது.