கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 9.71 சதவீதமும், இறக்குமதி 9.06 சதவீதமும் சரிந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 2,501 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.71 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதேபோல், ஜூன் மாதத்தின் இறக்குமதி 4,029 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.06 சதவீதம் சரிந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை 1,528 கோடியாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் 1,660 கோடியாக இருந்தது.
மேலும், அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்த வர்த்தகப் போரின் காரணமாக சீனாவுக்கான ஏற்றுமதி 14.1 சதவீதமாக குறைந்துள்ளது.