இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி-20, ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலை யில், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வியாழனன்று தொடங்குகிறது. சொந்த மண்ணில் டி-20, ஒருநாள் தொடரை இழந்துள்ள விண்டீஸ் அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் முனைப்பில் களமிறங்கு கிறது. டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி மூன்று கோப்பையுடன் தான் தாய்நாடு செல்வோம் என்று இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். அத்துடன் இரு அணிகளும் இந்த தொடரின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் காலடி வைக்கின்றன. இதனால் இந்த தொடர் பரபரப்பாகத் தொடங்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.