இன்றைய ஆட்டங்கள்
ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து
வெற்றி 30% - 70% வாய்ப்பு
இடம் : டவுன்டன்
நேரம் : மாலை 6 மணி
தொடர் தோல்வியை சந்தித்தாலும் இனி ஆப்கானிஸ்தான் அணியை யாரும் கத்துக்குட்டி என்று சொல்ல முடியாது. அந்தளவுக்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பாதையில் முள் படுக்கையை விரித்து தடை ஏற்படுத்து கிறது. பலமான அணிகளாக வர்ணிக்கப்படும் ஆஸ்தி ரேலியா, இலங்கை ஆகிய அணிகள் ஆப்கானிஸ்தான் அணியிடம் திணறித்தான் வெற்றியை ருசித்தன. நியூஸிலாந்து அணி மூன்று வகையிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அந்த அணியின் வெற்றி நடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளம்
பேட்டிங்கிற்கும், வேகப்பந்துவீச்சிற்கும் நன்கு ஒத்துழைக்கும். பிட்ச் பகுதியில் புற்கள் சற்று அதிகமாக இருப்பதால் சுழல் எடுபடாது.சாதாரண வேகத்தில் வீசப்படும் பந்துகள் கூட நெஞ்சிற்கு மேல் எகிறும்.பிட்ச் மையத்தை நன்கு கண்காணித்தால் ரன் குவிப்பு மூலம் வாணவேடிக்கை நிகழ்த்தலாம்.