tamilnadu

img

ரக்பி உலகக்கோப்பை மகுடம் சூடப்போவது யார்?

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

ரக்பி விளையாட்டின் 9-வது உலகக்கோப்பை தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது.  தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நியூஸி லாந்து, வேல்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. அரையிறுதியின் முடிவில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், சனியன்று ஜப்பானின் முக்கிய நகரான யோக்கோகாமாவில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் வெற்றி தோல்வி பற்றிக் கணிக்க முடியாது.  

நியூஸி., 3-ஆம் இடம் 

அரையிறுதியில் தோல்வி கண்ட நியூஸிலாந்து - வேல்ஸ் அணிகள் 3-ஆம் இடத்திற்காக வெள்ளியன்று பலப்பரீட்சை நடத்தினர்.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 40- 17 என்ற புள்ளி கணக்கில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 3-ஆம் இடத்தை பெற்றது.

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா 
இடம் : நிசான் மைதானம் - யோக்கோகாமா 
நேரம் : மதியம் 2:30 மணி
(இந்திய நேரப்படி)

 

சேனல் : இஎஸ்பிஎன் (தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சியில் தெரிந்தால் அதிர்ஷ்டம் தான்)