tamilnadu

img

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டி யின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தத் திட்டமிட்டது.  உலகக்கோப்பை போன்று தனியாக நடத்தினால் சிக்கல் உருவாகும் என்பதால் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் டெஸ்ட் சுற்று பயணத்திலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி இறுதிப்போட்டியை மட்டும் தனியாக நடைபெறுமாறு திட்டமிட்டு திங்களன்று ஐசிசி அட்டவணை வெளியிட்டது.    இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, விண்டீஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கிறது. மொத்தம் 27 டெஸ்ட் தொடர்களின் மூலம் 71 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும். இந்த  தொடர் வியாழனன்று (ஆகஸ்ட் 1) தொடங்கும் ஆஷஸ் தொடர் முதல் 2021– ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் நடைபெறும் இலங்கை - விண்டீஸ் தொடரோடு (லீக் சுற்று ஆட்டங்கள்) நிறைவுபெறுகிறது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வார த்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (லார்ட்ஸ்) நடைபெறுகிறது. 

புள்ளிகள் 

ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்ச மாக 120 புள்ளிகள் வழங்கப்படும். 5 போட்டி கள் அடங்கிய டெஸ்ட் தொடர் என்றால் 120 புள்ளிகளைப் பிரித்து ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிக்கும் 24 புள்ளிகளும், டிரா வுக்கு 8 புள்ளியும், ‘டை’ என்றால் 12 புள்ளி களும் கிடைக்கும். இதே 3 போட்டி டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி, டிரா, டை முறையே 40, 13.3, 20 வீதம் புள்ளிகள்  வழங்கப்படும். 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கு 60 புள்ளிகள் கிடைக்கும். இந்த சாம்பியன்ஷிப் தொடரை வெல்ல  இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு அதிக சாதகம் உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவின் தொடர்கள்

டெஸ்ட் போட்டியில் சிறப்பு கவனம் செலுத்தும் இந்திய கிரிக்கெட் அணி 6 நாடுகளுடன் மொத்தம் 18 போட்டிகளில் பங்கேற்கிறது.
 

விண்டீஸ்
2 டெஸ்டுகள்(ஆகஸ்ட்)

 

தென் ஆப்பிரிக்கா 
3 டெஸ்டுகள்(அக்டோபர்)

 

வங்கதேசம்
2டெஸ்டுகள்(நவம்பர்)

 

நியூஸிலாந்து
2டெஸ்டுகள் (2020)

 

ஆஸ்திரேலியா
4 டெஸ்டுகள்(2020)

 

இங்கிலாந்து
5 டெஸ்டுகள்(2021)