tamilnadu

img

நடுவர் நிகெல் லாங் மீது நடவடிக்கை இல்லை

ஐபிஎல் தொடரின் 54-வது லீக்ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்றிய இங்கிலாந்தைச் சேர்ந்தநிகெல் லாங்கிற்கும், பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் நோபால்தொடர்பான பிரச்சனையால் வாக்குவாதம் ஏற்பட்டது. நிகெல் லாங் கோலியைச் சமாதானப்படுத்தியும் கோலி ஆக்ரோஷமாகக் கத்தினார்.போட்டியின் முதல் பாதி முடிந்த பிறகு பெவிலியன் திரும்பிய நடுவர் நிகெல் லாங் கோபத்தில் மைதான அறை கதவை எட்டி உதைத்தார். இதில் கதவு சேதம் அடைந்தது. இதுபற்றி ஐபிஎல் நிர்வாகம் நடுவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய போது,கதவின் சேதத்தைச் சரிசெய்ய ரூ.5 ஆயிரத்தை நிகெல் லாங் அளித்தார்.ஆனால் கர்நாடக கிரிக்கெட் சங்கம் இந்த விவகாரத்தை பிசிசிஐ கவனத்திற்குக் கொண்டு சென்று புகார் அளித்தது.நிகெல் லாங் விவகாரம் தொடர்பாகபிசிசிஐ தரப்பில் கூறியதாவது,”ஐபிஎல் போட்டியில் நிகெல் லாங் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்துகொண்டார். இது மனித இயல்புதான். அவர் தனது தவற்றை உணர்ந்து சேதத்துக்குப் பணம் செலுத்தி விட்டார்.இந்த பிரச்சனை இதோடு முடிந்து விட்டது.பெரிதாக்க விரும்பவில்லை என்று கூறி பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.