தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இரண்டு விதமான போட்டி களைக் கொண்ட தொடரில் விளையாடு வதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் (தர்மசாலா) மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி-20 ஆட்டம் பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி மைதானத்தில் புதனன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் சமபலத்தில் இருப்பதால் இந்த தொடர் உலகளவில் டிரெண்ட் ஆகியுள்ள நிலை யில், மழையின் தயவால் தான் போட்டியே நடக்கும் என்பதால் இந்த தொடர் சுவாரஸ்யமின்றி நகருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மழை வருமா?
மொஹாலியில் மந்தமான வானிலை நிலவுகிறது. பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், மாலை நேரங்களில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் இரவு நேரங்களில் லேசான சாரலுக்கு வாய்ப்புள்ளது.