tamilnadu

img

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம் - காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு முடிவு

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தனது தொப்பியை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் விற்றார். 

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தனது தொப்பியை ஏலத்தில் விற்க உள்ளதாக அறிவித்தார்.

இதை அடுத்து, ஷேன் வார்னின் தொப்பியை வாங்க ஆன்-லைன் மூலம் பலரும் போட்டி, போட்டி ஏலம் கேட்டனர். இதனால் அவருடைய தொப்பி வரலாறு காணாத உச்ச விலையான ரூ.5 கோடிக்கு  ஏலம் போனது. கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டதில், அதிக விலைக்கு போனதில் இதுவே சாதனை தொகையாகும்.