இந்திய அணியின் அனுபவ வீரரான தோனியின் சாதனையை, இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
கிங்ஸ்டன் மாகாணத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில், இசாந்த் சர்மா வீசிய பந்தில் மே.இ.தீவுகள் வீரர் பிராத்வெய்ட் அடித்த பந்தை கேட்ச் பிடித்து 50வது டிஸ்மிஸலை நிறைவு செய்தார். இந்நிலையில், 11 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 டிஸ்மிஸல்கள் செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக தோனி, 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 டிஸ்மிஸல்களைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் ரிஷப் பந்த், 20 கேட்சுகளைப் பிடித்து, அதிகமான கேட்சுகளை டெஸ்ட் தொடரில் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.