tamilnadu

img

சென்னையில் இன்று கூடுகிறது

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுக்குழுக் கூட்டம்
 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் சென்னை யில் வியாழனன்று காலை தொடங்குகிறது. டிஎன்பிஎல் சூதாட்ட சர்ச்சை மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் போன்ற நிகழ்வுகளுக்கான விவாதம் இந்த கூட்டத்தில் அரங்கேறும் என எதிர்பார்க்கப் படுகிறது.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபா குருநாத் தலைவராகத் தேர்வு செய்ய ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு கிரிக் கெட் சங்க தேர்தலில் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படு  வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.