கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலம் பெரும்பாலும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தான் நடைபெறும். ஆனால் இந்த முறை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்குபெறும் இந்த ஏலத்தில் 71 வீரா்கள் விடுவிக்கப்பட்டனர். 127 பேரை (35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட) தக்க வைத்துக் கொண்டன.
8 அணிகளின் மொத்த கையிருப்பு ரூ.208 கோடியாக உள்ளது. இதில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக ரூ.42.70 கோடி கையிருப்பு வைத்துள்ளது. மும்பை அணி ரூ.13.05 கோடியும், சென்னை அணி ரூ.14.60 கோடியும், தில்லி அணி ரூ.27.85 கோடியும், கொல்கத்தா ரூ.35.65 கோடியும், ராஜஸ்தான் அணி ரூ.28.90 கோடியும், பெங்களூரு ரூ.27.9 கோடியும், ஹைதராபாத் அணி ரூ.17 கோடியும் கையிருப் பாக வைத்துள்ளன. ஒவ்வொரு அணியும் எவ்வளவு இருப்புத் தொகை வைத்துள்ளதோ அதற்குள் தான் வீரர் களை ஏலம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.