ஜம்மு - காஷ்மீர் விவகாரம் எதிரொலி
வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் (26 முதல்) 3 டி-20, 2 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொட ரில் பங்கேற்பதற்காகப் பாகிஸ்தான் செல்கிறது. வங்கதேச மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் அஞ்சு ஜெயின், உதவி பயிற்சியாளர்கள் தேவிகா பால்ஷிகர், கவிதா பாண்டே ஆகியோர் இந்தியர்களாக இருப்பதால் பாகிஸ்தான் அரசு இவர்களுக்கு விசா அளிப்பது சிரமமான காரியம் என எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கதேச மகளிர் அணியில் பணியாற்றும் இந்திய பயிற்சியாளர்களுக்கு அனு மதியில்லை என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி முடிவுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் சிறு கண்டனம் கூட தெரிவிக்காமல் இந்தியப் பயிற்சியாளர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.