tamilnadu

img

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த தினேஷ் மோங்கியா 1995-96 காலகட்டத்தில் பஞ்சாப் அணியிலிருந்து உள்ளூர் தொடர்மூலம் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.   2001-ஆம் ஆண்டு வரை உள்ளூர் தொடரில் அசத்திய தினேஷ் மோங்கியா 2002-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக (கவுஹாத்தி - ஒருநாள்) சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார்.  2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பல்வேறு வகையில் உதவினார்.   

கடைசியாக 2007-ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) தொட ரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐசிஎல் தொடர்புடைய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ தடை விதிக்க மோங்கியாவின் கிரிக்கெட் வாழ்க்கையும் மங்கியது.   அதன் பிறகு கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் தலைகாட்டாத மோங்கியா புதனன்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளி லிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள் ளார்.  பேட்டிங், சுழற்பந்து வீச்சு என இரண்டி லும் கலக்கும் மோங்கியா 50க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி னாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணிக்காக விளையாடியது இல்லை. ஒரே ஒரு சர்வதேச டி-20 போட்டியில் விளையாடியுள்ளார். ஆனால் 121 முதல் தர போட்டிகளில் விளையாடி 27 சதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.