tamilnadu

img

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

கவுகாத்தியில், நேற்று நடைபெற இருந்த இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கவுகாத்தியில் நேற்று முதல் டி20 போட்டி நடைபெறுவதாக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். திட்டமிட்டபடி போட்டி இரவு 7.00 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.