ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் ஐசிசி(ICC-International Cricket Council) 20 ஓவர் போட்டிகளுக்கான 80 அணிகள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய ஆண்கள் அணி தற்போது 5ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி அதே இடத்தை நீடித்து வைத்துள்ளது.
இதுவரை சர்வதேச அணிகளுக்கான பட்டியலை மட்டுமே வெளியிட்டு வந்த ஐசிசி கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் காரணமாக உறுப்பினர் அணி அனைத்தையும் உள்ளடக்கிய பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.