நான்கு நாட்கள் டெஸ்ட் திட்டம்
கிரிக்கெட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கிரிக்கெட் விளையாடும் நாடுகள் எதிர்ப்போ, ஆதரவோ அளிக்காமல் மவுனமாக இருக்கும் நிலையில், கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு அதிரடி பதில் ஒன்றைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,”முதலில் நாங்கள் ஐசிசி-யின் பரிந்துரையை முழுவதுமாக பார்க்க வேண்டும். ஐசிசி-யின் அறிக்கை எங்களிடம் வரட்டும். அதன்பின் அந்த திட்டம் பற்றிக் கூறுகிறோம். தற்போது பதில் சொல்வது மிகவும் கடினம் என்பதால் கருத்து கூற இயலாது” என அதிரடியாகக் கூறினார். கங்குலியின் இந்த அதிரடி பேச்சால் ஐசிசி கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.