tamilnadu

img

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோரி பேர்ன்ஸ் விலகல்

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோரி பேர்ன்ஸ், காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. இரண்டாவது டெஸ்ட் இன்று கேப் டவுனில் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒரு பகுதியாக கால்பந்து விளையாடினார்கள். அப்போது எதிர்பாராத விதமாக தொடக்க ஆட்டக்காரரான ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும், வரவிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.