tamilnadu

img

ஆஷஸ்... இன்று மதியம் தொடங்குகிறது

கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பை தொடருக்கு அடுத்து மிகப்பெரிய தொடராக கருதப்படுவது இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரே ஆகும். பழமைவாய்ந்த இந்த டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் தனி கவனம் செலுத்தி ரசிப்பார்கள். காரணம் இரு அணி வீரர்களும் கீரியும் பாம்புமாக மோதிக் கொள்வார்கள் என்பதால் அதிரடியும், ஆக்ரோஷமும்  களைக்கட்டும். 

இந்நிலையில் நடப்பாண்டிற்கான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு பிர்மிங்ஹாம் மைதானத்தில் தொடங்குகிறது.  

இடம் : பிர்மிங்ஹாம் / நேரம் : பிற்பகல் 3:30 மணிக்கு (இந்திய நேரம்)