tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ்.... இறுதியில் செரீனா

நியூயார்க்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரை
யிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 5-வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் பந்தாடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கனடாவின் பியான்காவும், சுவிட்சர்லாந்தின் பெலின்டாவும் மோதினர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இளம்புயல்  பியான்கா 7-6(7-3), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி ஞாயிறன்று அதிகாலை 1:30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. 

இன்று கலப்பு இரட்டையர் பிரிவு - இறுதி போட்டி 
ஹவோ ஜிங் (தைவான்), மைக்கேல் வீனஸ் ( நியூஸிலாந்து)  -  ஜேமி முர்ரே (இங்கிலாந்து) - மாட்டெக் சாண்ட்ஸ் (அமெரிக்கா)
நேரம் : இரவு 9:30 மணி இந்த போட்டியை இஎஸ்பிஎன் (ESPN) சேனலில் ரசிக்கலாம். ஆனால்  தமிழ்நாடு அரசு கேபிள் சேவை செட் பாக்ஸில் இந்த சேனல் செயல்படாது.