tamilnadu

img

உலக தண்ணீர் தின பேச்சுப்போட்டி

உலக தண்ணீர் தின பேச்சுப்போட்டி

குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடை பெற்றது. குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாயன்று உலக தண்ணீர் தினம் கொண்டா டப்பட்டது. அப்போது, குமாரபாளையம் எக்ஸல் பொறியி யல் கல்லூரியில் ‘தண்ணீரின் முக்கியத்துவம்’ குறித்த பேச் சுப்போட்டி நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கௌசல்யாமணி தலைமை தாங்கினார். ஆசிரியை கார்த்திகேயனி வரவேற்றார். சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் எக்ஸல் பொறி யியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் நடரா ஜன், தளிர்விடும் பாரதம் சார்பில் சரண்யா பிரபு, பாலாஜி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை ஜாஸ் மின் ஸ்டார்லெட் நன்றி கூறினார்.

சேதமடைந்த தார்ச்சாலையால் விபத்து:

போக்குவரத்து பாதிப்பு நாமக்கல், மார்ச் 26- பள்ளிபாளையம் அருகே குட்டை முக்கு பகுதியில் சேத மடைந்த தார்ச்சாலையில் சரக்கு லாரி சாய்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் குட்டை முக்கு பகுதியில் பல்வேறு ஜவுளி நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 மாதங்க ளுக்கு முன் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் முடி யாமல் இருந்ததால், சேதமடைந்த சாலையில் கனரக வாக னங்கள் சென்று வந்தன. செவ்வாயன்று ஈரோட்டில் இருந்து ஜவுளி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சாய்வான சாலையில் முன்பக்க சக்கரம் புதைந்ததால் நகர முடியா மல் சாய்ந்தது. பின்னர் மாற்று வாகனத்தின் மூலம் மூட்டை கள் மாற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. பள்ளிபாளையம் நக ராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள் முழுமையாக நடைபெறா ததால் அடிக்கடி வாகனங்கள் புதைந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கோவில் திருவிழா உள் ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், போர்க்கால அடிப் படையில் தார்ச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.